பட்டாபிராமில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு
பட்டாபிராமில் ஊரடங்கை மீறிய வாகன .ஒட்டிகளில் போலீசார் அபராதம் விதித்தபோது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறி வருபவர்களுக்கு அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பட்டாபிராம் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் ஆவடி அருகே பட்டாபிராம், இந்து கல்லூரி, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட தெருக்களை இரும்பு தகரம் கொண்டு தெருக்களை அடைத்து, இருசக்கர வாகனங்களில் பொது மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தீவிர கட்டுப்பாடுடன் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கை மீறியும், காவல்துறை கட்டுப்பாடுகளை மீறியும் வெளியில் சாலையில் வரக்கூடிய வாகனங்களுக்கு பட்டாபிராம் பகுதியில் உள்ள காவல் துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பியது மட்டுமின்றி, சில இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu