என்ஜின் கோளாறு: பாட்னா- பெங்களூர் ஹம்சபர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தம்.

என்ஜின் கோளாறு: பாட்னா- பெங்களூர் ஹம்சபர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தம்.
X

இஞ்சின் கோளாறு காரணமாக ஆவடி அருகே நின்ற ஹம்சபர் விரைவு ரயில் 

பட்டாபிராம் அருகே என்ஜின் கோளாறு காரணமாக பாட்னா- பெங்களூர் ஹம்சபர் விரைவு ரயில் நின்றது. மாற்று இஞ்சின் பொருத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக சென்றது

ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே ரயில் இஞ்சின் கோளாறு காரணமாக பாட்னா - பெங்களூரு இடையேயான ஹம்சபர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தம். இஞ்சின் கோளாறு காரணமாக 2 மணி நேரத்திற்கு பின்னர் புதிய இன்ஜின் பொருத்தப்பட்டு ரயில் புறப்பட்டது.

பாட்னாவில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து பெங்களூரு செல்லக்கூடிய ஹம்சபர் எக்ஸ்பிரஸ் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.பட்டாபிராம்- நெமிலிச்சேரி இடையே ரயில் வந்தபோது ரயில் இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ரயில் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது இன்ஜினில் கோளாறு கண்டுபிடிக்கபட்டது. நீண்ட நேரமாக இன்ஜினை சரி செய்ய முயன்ற பணியாளர்களால் கோளாறு சரி செய்யப்பட முடியவில்லை.

இதனையடுத்து உடனடியாக திருநின்றவூரிலிருந்து மற்றொரு புதிய இன்ஜின் வரவழைக்கப்பட்டு பாட்னா பெங்களூர் விரைவு ரயிலில் இணைக்கப்பட்டது. இன்ஜின் கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நின்றிருந்ததால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் கடுமையான வெயிலால் ரயிலின் உள்ளே இருக்க முடியாமல் குழந்தைகள் அவதி அடைந்தனர். பின்னர் புதிய இன்ஜின் பொருத்தப்பட்டு மீண்டும் பெங்களூர் நோக்கி ரயில் புறப்பட்டு சென்றது.

இதனால் இந்த வழியில் வந்த மற்ற ரயில்கள், புறநகர் ரயில் செல்லும் வழித்தடத்தில் அனுப்பப்பட்டன. தொடந்து ரயில்கள் பழுதாவது, விபத்துகுள்ளாவது தொடர் கதை ஆகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் திருநின்றவூர் அருகே ரயில் தண்டவளத்தில் மரத்துண்டு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture