ஆவடி மாநகராட்சியில் மேல்நிலை மின் அமைப்பை, புதைவடமாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்
ஆவடி மாநகராட்சி 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் சுமார் 5 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். பெரு நகராட்ச்சியாக இருந்த ஆவடி கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தது.
இருந்த போதிலும் மாநகராட்சி அந்தஸ்துக்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற மாநகராட்சிக்கு இணையாக ஆவடி மாநகரத்தில் உயர் மற்றும் தாழ்வழுத்த மேல்நிலை மின் அமைப்பை புதைவடமாக மாற்றும் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
சுமார் 150 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மூலம் ஆவடி மாநகராட்சியில் 2,80,000 மின் இணைப்புகளும் தரை வழியாக வழங்ப்படவுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் ஆவடியின் கனவு திட்டமாக இந்த திட்டம் இருந்து வந்தது அந்த திட்டம் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேரிடர் காலங்களில் மின் துண்டிப்பு, மின் சேதம் ஆகியவை தடுக்கப்படும் என்றார். முதல்கட்ட 15கோடி மதிப்பில் இன்று ஹவுசிங் போர்ட், காமராஜர் நகர் போன்ற பகுதியில் இந்த திட்டம் நடைபெற்று வரும் என்றும் ஒரு மாதக்காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu