சி.ஆர்.பி.எப். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது

சி.ஆர்.பி.எப். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில  இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட கரன்சிங்.

ஆவடியில் மத்திய அரசு சிஆர்பிஎப் பணிகளுக்கான தேர்வில் ஆல்மாற்றம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவடியில் சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். தேர்வு எழுதிய நபர் வேறு,உடற்தகுதி தேர்வு பங்கேற்ற நபர் வேறு.கைரேகை பயோமெட்ரிக் மூலம் கண்டுபிடிப்பு.

மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு படை துறைகளில் ஒன்றான சிஆர்பிஎப் மையம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது.இங்கு சிஆர்பிஎப் துறையில் தூய்மை பணியாளர்,சமையலர்,ஓட்டுநர்,மெக்கானிக்,தோட்ட வேலை செய்பவர் உள்ளிட்ட கிரேட் -டி பிரிவுகளில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது.இதற்காக கடந்த 2023ம் ஆண்டில் எழுத்து தேர்வு நடைபெற்று முடிந்தது.இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டு,கடந்த 10ம் தேதி முதல் 23 தேதி வரை உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சிஆர்பிஎப் அதிகாரிகளால் ஒரு வடமாநில இளைஞர் பிடிபட்டுள்ளர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கரன்சிங் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் ஒருவர் தூய்மை பணியாளர்களுக்கு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இதை தொடர்ந்து இன்று நடைபெறும் உடற்தகுதி தேர்விற்கு கரன்சிங் எனும் பெயர் கொண்ட தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் கலந்துகொண்டுள்ளார்.தேர்வு துவங்குவதற்கு முன் அதிகாரிகள் பயோமெட்ரிக் மூலம் கைரேகை பதிவுகளை மேற்கொண்டபோது,பிடிபட்ட நபரின் புகைப்படம் இல்லாமல் இதற்குமுன் தேர்வு எழுதிய நபரின் புகைப்படம் இருந்துள்ளது.

இதன் காரணமாக அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.இதன் பின்னர் சிஆர்பிஎப் அதிகாரிகள் அவனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் கரன்சிங்கிடம் இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா? யாருக்காக ஆள்மாறாட்டம் செய்தார்,இதற்காக பணம் எவ்வளவு பணம் பெறப்பட்டு உள்ளது என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு பாதுகாப்பு படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story