திருமுல்லைவாயிலில் திருமணமாகி சில மாதங்களே ஆன புது மணப்பெண் தற்கொலை

திருமுல்லைவாயிலில் திருமணமாகி சில மாதங்களே ஆன புது மணப்பெண் தற்கொலை
X

பைல் படம்.

ஆவடி அருகே திருமணமான சில மாதங்களே ஆன நிலையில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வாசித்து வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் சென்னை பிராட்வேயில் உள்ள பாத்திரக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தரண்யா (25) ஆகிய இருவருக்கும் திருமணமாகி 9 மாதம் ஆகிறது.

இந்நிலையில் ஐயப்பன் வேலைக்குச் சென்ற நிலையில், தனது மனைவி தரண்யாவை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போன் எடுத்துப் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் வீட்டு உரிமையாளர் ரஞ்சித்திற்கு போன் செய்து தன் மனைவியை என்ன செய்கிறாள் என பார்க்குமாறு கூறியுள்ளளார். அவர் வந்து பார்த்தபோது தரண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் தரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!