ஆவடியில் ரூ.9.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர் நாசர் அடிக்கல்

ஆவடியில் ரூ.9.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர் நாசர் அடிக்கல்
X

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்.

ஆவடியில் ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட பணிகளை அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டுமென ஆசிரியர்களும், மாணவர்களும், மாணவர்கள் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிக்கு ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 39 வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 33.வது வார்டு கோணம் பேடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.

அதேபோல் 15 ஆவது நிதி குழு மானியத்தின் கீழ் ரூபாய் 4.கோடி மதிப்பீட்டில் சுமார் 35 சாலைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ்.1.28 மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக முப்பதாவது வார்டு பிருந்தாவன் காலனி பகுதியில் தார் சாலை பணிகளையும் 15 வது வார்டு மருதம் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்து பணிகளை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், கிழக்கு பகுதி செயலாளர் கோபி சேகர், பகுதி செயலாளர் பொன் விஜயன், ராஜேந்திரன், மண்டல குழு தலைவர் அமுதா கோபி சேகர், ஜோதி லட்சுமி, பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!