திருமுல்லைவாயலில் பூங்காவை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருமுல்லைவாயலில் பூங்காவை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
X

திருமுல்லைவாயலில் சீரமைக்கப்பட்ட பூஙகாவை அமைச்சர் ஆவடி நாசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

திருமுல்லைவாயில் உள்ள பூங்கா 25 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயில் 7வது வார்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள என் வி டி நகர் சிறுவர் பூங்கா உள்ளது இந்த பூங்காவானது கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய நகராட்சி தலைவராக இருந்த ஆவடி சா.மு.நாசரால் ரூபாய் 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவை வெங்கடேஸ்வரா நகர் சுப்ரமணிய நகர் மற்றும் திருமலை நகர் பகுதிகளில் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் பயன்படுத்தி வந்தனர் கடந்த 2016 ஆண்டுக்கு பிறகு அதிமுக ஆட்சி நிர்வாகம் பராமரிக்காமல் விட்டு விட்டதால் அங்கு உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து விட்டது.

இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்தனர் இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் திமுக ஆட்சி வந்தவுடன் ஆவடி தொகுதி எம்எல்ஏவும் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து பூங்காவில் சீரமைக்க அமைச்சர் உத்தரவிட்டதை அடுத்து 25 லட்சம் ரூபாய் செலவில் பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்கள் நடைபாதை நவீன முறையில் சீரமைக்கப்பட்டு இதன் அடுத்து பூங்காவை அமைச்சர் சா.மு.நாசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் துவக்கி வைத்தார் பின்னர் அமைச்சர் பூங்காவை சுற்றிப் பார்த்தார் இதன் தொடர்ச்சியாக

திருமுல்லைவாயில் 7 வார்டியில் சிவசங்கரபுரம் தெருவில் 10 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆழ்துளை கிணறு தண்ணீர் டேங்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

இதில் மாநகராட்சி ஆணையர் சரசுவதி பொறியாளர் வைத்தியலிங்கம் உதவி பொறியாளர் சத்தியசீலன் ஆவடி கிழக்கு பகுதி பொறுப்பாளர் பேபி சேகர் வட்ட செயலாளர் முல்லை ராஜ் உள்பட அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!