ஆவடியில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆவடி நாசர்

ஆவடியில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆவடி நாசர்
X

ஆவடியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆவடியில் நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், வாணி மகால் பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக நடந்த 31வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேசுகையில்

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழகமெங்கும் 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது. அதன்பொருட்டு நம் திருவள்ளூர் மாவட்டத்தில்; 1,100 தடுப்பூசி மையங்;களில் 4,400 பணியாளர்களைக் கொண்டு முகாம் நடைபெறுகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் இதுநாள் வரை முப்பது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 15,54,267 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மக்கள் பயனடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கான இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு முதல் தவணை 94.2சதவீதம் மற்றும் இரண்டாவது தவணை 78.2 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கும் மற்றும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் நடைபெற்ற 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில்; இதுநாள் வரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதிவாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி "தடுப்பூசி ஒன்றே தீர்வு" என்பதை உணர்ந்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்டுப்பு மருந்துத்துறை சார்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், துணை மேயர் எஸ்.சூரியகுமார், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் செந்தில் குமார், பகுதி கழக பொறுப்பாளர் பேபி சேகர், மண்டல குழு தலைவர் அமுதா சேகர், ஆவடி மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil