ஆவடி தொகுதியில் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை : அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் களம் காணும் அமைச்சர் பாண்டியராஜன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு உத்திகளை கையாண்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அங்கு குழுமியிருந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடத்தில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,ஆவடியில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் மூலமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும். தொழில் முனைவோர் கல்வி போன்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து இளைஞர்கள் பயன்படும் வகையில் கடந்த ஆண்டு செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் மீண்டும் தாம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆவடியை வேலை இல்ல பட்டதாரிகள் இல்லாத நிலைக்குக் கொண்டு வருவேன் என உறுதியளித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu