தேசிய கொடியை போல் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டம்

தேசிய கொடியை போல் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப்  அணிந்து   ஆர்ப்பாட்டம்
X

தேசிய கொடி நிறத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆவடியில் தேசிய கொடியை போல் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத் -ன் மாநில பொது செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரவாயில் ஆவடி,பட்டாபிராம்,திருநின்றவூர் பூந்தமல்லி,அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்டோர் குறிப்பாக பென்கள் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து கொண்டு கைகளில் கர்நாடக நீதிமன்றத்துக்கு எதிரான வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கர்நாடக நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்

ஆர்ப்பாட்ட மேடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் பேசுகையில்.

காலம் காலமாக பள்ளிக்கூடங்கள் நடைபெற்றாலும் காலம் காலமாக முஸ்லிம் பெண்கள் தலை முக்காடு போடக்கூடிய வழக்கம் இருந்தாலும் பா.ஜ.க. அரசு எப்போது மத்தியில் ஆட்சியை அமைத்து பெரும்பான்மையை கைப்பற்றியதோ அப்போது தான் இது பிரச்சினையாக மாறி இருக்கிறது.

நாங்கள் ஆர்ப்பாட்டம் என்று இங்கே கூடி நிற்கின்றோம் என்றால் எங்களுடைய உரிமைக்காக தான். சட்டத்தின் துணைகொண்டு பா.ஜ.க. அரசு எங்கள் உரிமைகள் மீது கைவைக்கும் பொழுது ஒவ்வொரு உரிமைகளாக பறித்துக் கொண்டே இருக்கின்ற பொழுது அதை எதிர்த்து ஜனநாயக பூர்வமான வழிமுறைகளை உடனே எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம் என்றார்.

Tags

Next Story