விபத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் உயிரிழந்த சோகம்

விபத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும்  உயிரிழந்த சோகம்
X

உயிரிழந்த தந்தை மகன்

துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத அசோக்குமாரின் தந்தை குப்பன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்து இறந்தார்

ஆவடி அருகே விபத்தில் சிக்கி மகன் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மகன் உடலை பார்த்து கதிறி அழுது தந்தையும் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாலவேடு காந்திநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் அசோக் குமார்(42) இவர் சென்னை அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று இரவு அசோக் குமார் திருநின்றவூர் இருந்து பாக்கம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் ஒன்று அசோக் குமார் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது இதில் அசோக்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து அசோக் குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காரை ஓட்டி வந்த தாமரைப்பாக்கம் ஊராட்சி அம்மனம்பாக்கம் சேர்ந்த சங்கர்(39) இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் நேற்று முந்தின இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உடற்கூராய்வுக்குப் பின்பு அசோக் குமார் சடலத்தை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் தான் மகனை உயிரிழந்ததை கண்டு துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத அசோக்குமாரின் தந்தை குப்பன்(66) நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார்.

அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலே குப்பன் பரிதாபமாக இறந்து போனார். இருவரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் நெஞ்சு வலியில் தந்தை இறந்து போன சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையே ஏற்படுத்தியது.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!