திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
ஆவடி பகுதியில் திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட25 காவல் நிலைய எல்லைக்குள் மூன்று மாத காலத்தில் வீடுகள், கடைகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல இடங்களில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, கைபேசிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.31/2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி கைப்பேசிகள் உள்ளிட்டவை தொலைத்தவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை திருமண மண்டபத்திற்கு வர வைத்து சம்பந்தப்பட்ட பொருட்களின் உரிமையாளர்களிடம் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஒப்படைத்தார.
அபபோது அவர் பேசியதாவது:-
ஆவடி ஆணையரகத்திற்குட்பட் பகுதிகளில் ஒன்றரை மாத காலத்தில் போதை பொருட்கள் கடத்திய 71 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து85 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மூன்று மாத காலத்தில் வீடுகளில், கடைகளில், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து தொலைத்த பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வெளியில் வரும்போதும் சரி வீட்டில் இருக்கும்போதும் சரி எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் . தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் அளிக்க வேண்டும். இப்படி நீங்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். இப்படி தகவல் அளித்தால் நாங்கள் குற்றங்கள் நடைபெற விடாமல் தடுக்க முடியும்.வீடுகளிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும் அனைத்து பொதுமக்களும் காவல்துறையினருக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இக்குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். சிறப்பான முறையில் பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து அவர்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை வழங்கினார். மீட்கப்பட்ட அனைத்து பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 3.கோடியே 50 லட்சம் மதிப்பில் இருக்கும் என்ன கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை போலீஸ் கமிஷனர்கள் உமையாள், பெருமாள், பாஸ்கரன், மணிவண்ணன் விஜயலட்சுமி மற்றும் ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். திருட்டு போன பொருட்களை கண்டு பிடித்து கொடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu