காதலன் விபத்தில் இறந்த துக்கம்; பெண் தூக்கிட்டு தற்கொலை

வினோதினி -வசந்த் (கோப்பு படம்)
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோயில், பதாகை பூம்பெழில் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜேந்திரன் இவரது மகள் வினோதினி(22) வினோதினி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வினோதினி ஆவடி முத்தா புதுப்பேட்டை கரிமேடு என்கின்ற பகுதியில் சார்ந்த வசந்த்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார் இந்த நிலையில் வசந்த் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். வசந்த் இறந்த செய்தியை அறிந்து வினோதினி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
வசந்தின் பிரிவை தாங்க முடியாத வினோதினி, வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் மகள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என்று சந்தேகம் கடந்த பெற்றோர், பார்த்தபோது தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், வினோதினி சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் காதலனின் பிரிவை தாங்க முடியாமல், காதலித்த பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பு, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu