ஆவடி ராணுவ தளவாட கண்காட்சி: தமிழிசை சௌந்தர்ராஜன் பார்வையிட்டார்
ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடும் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னையை அடுத்த ஆவடி டேங்க் பேக்டரி வளாகத்தில் படை உடைத் தொழிற்சாலை, கனரக வாகனம் தொழிற்சாலை சார்பில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரும் 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத தலைக்கவசம், குண்டு துளைக்காத பாதுகாப்பு ஜாக்கெட், பாராசூட், நவீன டெண்ட் ஆகியவற்றை தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கனரக வாகன தொழிற்சாலையின் கண்காட்சியை பங்கேற்று பார்வையிட்ட அவர், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பீரங்கி தேங்க் உள்ளிட்டவைகளை சென்று கண்டுகளித்தார். மற்றும், உதிரி பாகங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியும் பார்வையிட்டார்.
பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் தேங்க் மேலே ஏறி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அங்கே CVRDEயின் விஞ்ஞானிகள், தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயந்திரத்தின் தன்மையும் அதன் உபயோகம் பயன்பாடு உள்ளிட்டவற்றை குறித்து விளக்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், இந்த கண்காட்சியின் மூலம் நமது ராணுவ வீரர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இந்த கருவிகளை எல்லாம் இயக்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கண்காட்சியை வைத்திருக்கிறார்கள். இந்த கண்காட்சி உண்மையிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஒரு தேசப்பற்றை ஊட்டுவதாக இருக்கும் என்று கூறினார்
மேலும் அவர் தெரிவிக்கையில், ஒமிக்ரான் வந்துள்ள நிலையில் எல்லோரும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். எல்லாருமே முக கவசம் அணிந்து அடிக்கடி கைகளை கிருமி நாசினி உள்ளிட்டவை கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu