கொரோனா 3ம் அலை வந்தாலும் அரசு வெல்லும்: அமைச்சர் சா.மு.நாசர் உறுதி!

கொரோனா 3ம் அலை வந்தாலும்  அரசு வெல்லும்: அமைச்சர் சா.மு.நாசர் உறுதி!
X

அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு அதை வென்று காட்டும் என அமைச்சர் சா.மு. நாசர் உறுதியளித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு துவக்க விழா நடைபெற்றது. மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

பின்னர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு வெல்லும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!