ஆவடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்

ஆவடி அருகே மர்ம நபர்களால் கண்ணாடி உடைக்கப்பட்ட அரசு பேருந்து.
ஆவடி அருகே அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை குடிபோதையில் உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது. இந்துக் கல்லூரி பேருந்து நிறுத்தகம் அருகே வந்து நிற்கும் பொழுது குடிபோதையில் இருந்த 2 வாலிபர்கள் பின்புற கண்ணாடி மீது கற்களை வீசி உடைத்து விட்டு அங்கிருந்து இந்துக்கல்லூரி ரயில்நிலையம் அருகே ஓடிச் சென்று மறைந்து விட்டனர். உடனடியாக அரசு பேருந்து நடத்துனர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து உடனடியாக பேருந்து, நடத்துனர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்துவந்த பட்டாபிராம் காவல்துறையினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பேருந்தில் அதிக பயணிகள் இல்லாததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கவிதை காயம் ஏற்படவில்லை இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu