பூந்தமல்லி அருகே காதலன் மரண செய்தி அறிந்து காதலியும் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே 12 ம் வகுப்பு அரசு பொது தேர்வில் தோல்வியடைந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதால் அவரது காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் டில்லி(வயது47), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சாந்தி(42). இவர்களது மகள் நந்தினி(16), பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு இவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது நந்தினி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நந்தினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நந்தினியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து போய் விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நசரத்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து போன நந்தினி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெறாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை நந்தினி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவா இறந்து போனதாக தகவல் வந்த நிலையில் நந்தினி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நந்தினி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu