ஆவடி அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது

ஆவடி அருகே  கஞ்சா விற்பனை செய்த மூன்று  பேர் கைது
X
கைதானவர்கள்.
ஆவடி அருகே , கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது அவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அயப்பாக்கம் வாட்டர் டேங்க் சந்திப்பில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகம் பேரில் கஞ்சா விற்பனை செய்ய வந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நித்தியாதரன் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் ரபியுல் இஸ்லாம் மற்றும் முகமது அதிகுல் உசேன் மூவரை அதே இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மீது திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!