இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள்: லாரி மோதி ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகுதுரை (வயது 70). இவர் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமுல்லைவாயல் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 71). இவர் இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அழகுதுரை,மூர்த்தி இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது, ஆவடி பேருந்து திருத்தகம் அருகே சென்றபோது அங்கு, நின்றுகொண்டு இருந்த அரசு பேருந்தை முந்திச்செல்ல முயற்சித்துள்ளனர். பின்னால் வந்துகொண்டு இருந்த டிப்பர் லாரி, இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இதில், பேருந்துக்கும் - லாரிக்கும் நடுவே சிக்கிக்கொண்ட இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட, பலத்த காயமடைந்தனர் 2 பேரையும் அங்குள்ள பொதுமக்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சென்றதும் மருத்துவர்கள் அழகு துறையை பரிசோதித்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை தெரிவித்தனர். மேலும் பலத்த காயமடைந்த, மூர்த்தியை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து, சாலையில் விழுந்த இருசக்கர வாகனத்தில் லாரியின் பின்புற சக்கரம் ஏறியதை தொடர்ந்து, அது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போக்குவரத்து போலீசார் ராணிப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முனுசாமியை ( வயது 50 ) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu