62 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் அடிக்கல்

62 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் அடிக்கல்
X

முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்

திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2023 யின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது

திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 62 லட்சம் மதிப்பிட்டிலான புதிய திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2023.திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. அந்த வகையில் 12.வார்டு சூரத்தம்மன் கோயில் தெருவில்₹.30லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலை அமைக்கும் பணி, திருநின்றவூர் நகராட்சி அருகில் ₹.15லட்சம் மதிப்பிட்டிலான புதிய அங்கன்வாடி கட்டிடம், 17 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அதேபோல் பாரத பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு சாலை சிற்றுண்டி கடைகளை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் நாசர் சிற்றுண்டி கடைகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், நகர மன்ற செயலாளர் ரவி, நகர மன்ற தலைவர் உஷாராணி ரவி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!