ஆவடி மாநகராட்சியில் பணம் மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

ஆவடி மாநகராட்சியில் பணம் மாலையுடன்  வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு
X

ஆவடி மாநகராட்சி 24வது வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சிவா பண மாலையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆவடி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய் பணம் மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய் பணம் மாலை யுடன் வந்த சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது வேட்புமனு தாக்கல் செய்யும் நான்காம் நாளான இன்று சுயட்சை மற்றும் இதர கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை ஆவடி மாநகராட்சியில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்றும் நாளையும் அதிமுக ,திமுக , பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் ஆவடி மாநகராட்சி உட்பட்ட ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு திருமுல்லைவாயில் நாகம்மை நகரில் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சிவா 500 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஜனநாயகத்தை பணநாயகம் பெறுவதாகவும் பணம் பெற்றுக் கொண்டு யாரும் ஓட்டுப் போட வேண்டாம் எனவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பண மாலை உடன் வேட்புமனு தாக்கல் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். பணம் மாலையுடன் கட்சி வேட்பாளர் வந்து மனு தாக்கல் செய்ய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!