ஆவடி அருகே கடையில் புகுந்து ரூ.4 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு

ஆவடி அருகே கடையில் புகுந்து ரூ.4 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு
X
முத்தாபுதுப்பேட்டை ஹார்டுவேர் கடையில் புகுந்து 4 லட்ச ரூபாய் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு.

முத்தாபுதுப்பேட்டை பகுதியில் ஹார்டுவேர் கடையில் புகுந்து 4 லட்ச ரூபாய் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முத்தாபுதுப்பேட்டை பகுதியில் குமார் என்பவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று அவரது கடையின் எதிரே உள்ள குடோனுக்கு அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கடைக்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கழிப்பறைக்குச் சென்று வந்து திரும்பிப் பார்த்தபோது கல்லாவில் இருந்த 4 லட்ச ரூபாய் காணாமல் பாேனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சம்பவம் குறித்து முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தா புதுப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவர் வந்து செல்வதும் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project