திருவள்ளூரில் போதிய படுக்கை, ஆக்சிஜன் இருப்பு உள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி சார்பாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி சார்பாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.இந்த முகாமினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் பங்கேற்று துவக்கி வைத்தார். மேலும் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பணியாளர்களுக்கு கூறினார். இதனை தொடர்ந்து பணியாளர்களுக்கு பல்ஸாக்சி மீட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருவள்ளூர் மாவட்டம் பொறுத்தமட்டில் முதல் தவணை தடுப்பூசி 87% செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 13 % மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அவர்களை தடுப்பூசி செலுத்த வைக்க வேண்டும் என்பது தான் முதல் பணியாக உள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவு உள்ளது,தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு வகுத்துள்ள வழிமுறைகள் படிதான் தனியார் மருத்துவ மனைகள் செயல்பட சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் சுகாதார செயல் அலுவலர் அப்துல் ஜாபர் மற்றும் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu