வாக்காளர்களுக்கு பணம்- பெண்கள் மீது வழக்கு

வாக்காளர்களுக்கு பணம்- பெண்கள் மீது வழக்கு
X

ஆவடியில் தேர்தல் அதிகாரிகள் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய வாகன சோதனையில் 12 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். மேலும் அதிமுகவை சேர்ந்த 2பெண்கள் உள்ளிட்ட 3பேர் கைது செய்தனர்.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அதிமுக வை சேர்ந்த சரஸ்வதி, அம்சவேணி ஆகிய இருவரும் கையில் வாக்காளர் பட்டியலோடு வீடு வீடாக பணம் விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையில் அதிகாரிகள் அந்த பெண்களை சூழ்ந்து மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து அதிமுக மகளிர் அணியினர் இருவர் மீது வழக்கு பதிந்தனர்.

அதேபோல் போதிய ஆவணங்கள் இல்லாமல் பெட்ரோல் பங்க் மேலாளர் தனசேகரன் என்பவர் கொண்டு சென்ற 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து கருவூலத்திற்கு அனுப்பினர். மேலும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பிரேம் என்பவரிடம் 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து கைது செய்தனர். ஆவடியில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று மணி நேரத்தில் ஆவணங்கள் இல்லாத 12லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!