தொடர் மின்வெட்டால், பொதுமக்கள் சாலைமறியல்; போக்குவரத்து பாதிப்பு

தொடர் மின்வெட்டால் ஆவேசமடைந்த மக்கள் சாலைமறியல் (மாதிரி படம்)
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த, திருநின்றவூர் நெமிலிச்சேரி பகுதியில். இரவு நேரங்களில் ஆறு மணி நேர முதல் 8 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சார துண்டிக்கப்படும் போது அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அலுவலகத்தில் தொலைபேசி எடுப்பதில்லை என்றும். மின்வாரிய அதிகாரிகளுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அவர்களும் எடுப்பதில்லை. என்றும் கடந்த நான்கு நாட்களாக இதே நிலைமை நீடித்து வருவதாகவும்.புகார் தெரிவித்தனர்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் இரவு நேரங்களில் சரியாக தூங்க முடியாமல் மிக அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், இதனைக் கண்டித்து நெமிலிச்சேரி பொதுமக்கள் 200.க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அறிந்த திருநின்றவூர் பட்டாபிராம் முத்தா புதுப்பேட்டை காவல்துறையினர் 50.க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இதனால் குழந்தைகள் வயதான முதியோர்கள் நோயாளிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் நேரில் சென்று எடுத்துக் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும், தாங்கள் பகலெல்லாம் பணிக்கு சென்று இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க பெறும் அவதிப்படுவதாக இந்த நிலைமை நீடித்தால் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அப்போது காவல்துறையினர் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இப்போராட்டத்தால் சென்னை- திருவள்ளூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu