ஆவடி அருகே குடிபோதையில் தகறாறு; கத்தியால் குத்த முயன்றவர் கைது

ஆவடி அருகே குடிபோதையில் தகறாறு; கத்தியால் குத்த முயன்றவர் கைது
X

பைல் படம்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜாக் நகரில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஜாக் நகர், அன்னை தெரேசா தெருவை சேர்ந்தவர் பிரபு (55). இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது வீட்டு வெளியே நின்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (37) குடிபோதையில் வந்து தகராறு செய்து அவரை கீழே தள்ளியுள்ளார்.

இதில் காயமடைந்த பிரபு திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து மீண்டும் பிரபு வீட்டிற்கு சென்ற மோகன்ராஜ் கத்தியை காட்டி மிரட்டியதால் போலீசார் நேற்று மோகன்ராஜை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!