வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை
X

திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ஜோதி ஸ்ரீ (19) இவருக்கும் திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் கடந்த 25.11.2020 இல் திருமணம் நடைபெற்றது. பாலமுருகனும் அவர் தாயார் அம்சாவும் வீடுகட்ட கடன் வாங்கியதால் பணம் தேவைப்படுவதாக கூறி வரதட்சணை வாங்கி வருமாறு ஜோதி ஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதி ஸ்ரீ தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் காலை தன் உடைகளை எடுக்க மாமியார் வீட்டிற்கு சென்றபோது, வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

அதையும் மீறி ஜோதிஸ்ரீ வீட்டு மாடிக்கு சென்று உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் அம்சா மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதில் விரக்தி அடைந்த ஜோதி ஸ்ரீ தன் சாவுக்கு காரணம் கணவரும் மாமியாரும் தான் என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் பாலமுருகன் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!