மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திருவிழா.

மாணவர்களின் கலைத்திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலைத்திருவிழா 27.மற்றும் 28ம் தேதிகளில் திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியிலும் மற்றும் ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசு மேனிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.
இதில் நடுப்பள்ளி தொடங்கி மேனிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி அளவிலும் ஒன்றிய அளவிலும் வெற்றிப் பெற்று மாவட்ட அளவில்பங்கு பெற்றனர் இந்த கலைத்திருவிழாவில் தனிநபர் குழு என இருவகையாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது நாட்டியம் , கிளாசிக்கல், ஓவியம் , பறையிசை , தெருக் கூத்து , மைம்ஸ், நாடகம் , இசை , பாடல் , கலிமண் சிற்பம் , காய் கனி சிற்பம், அழகு கையெழெத்து , கவிதை எழுதுதல் , பேச்சு போட்டி உள்ளிட்டப்பட கலைத்திறன் போட்டிகள் நடைப்பெற்றது.
அனைத்து போட்டிகளுக்கும் அந்தந்த கலையில் வல்லுநர்களாக உள்ளவர்களுடன் ஆசிரியர்களும் நடுவர்களாக பணியாற்றி மதிப்பெண் வழங்கினர். இதன் முடிவுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசளிப்பு மற்றும் சான்றுகள் வழங்கு்ம் விழா அன்று வழங்கப்படும் அதாவது முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் முன்னதாக திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொடக்கவிழாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
ஜெயா கல்விக்குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் கற்பகம், சுகானந்தம், மோகனா, முகமது அப்துல்லூ, உதவி திட்ட அலுவலர்கள்(தொடக்கக்கல்வி) மீனா குமாரி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
இந்திகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் சா.அருணன் கலந்துக் கொண்டு கலையின் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி நன்றி தெரிவித்தார். கலைதிருவிழாவில் மாவட்ட முழுவதிலும் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 600.கும் மேற்பட்ட மாணவ மாவணவிகள் பங்குபெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu