மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதையை சீரமைக்க கோரிக்கை

மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதையை சீரமைக்க கோரிக்கை
X

மழை நீர் தேங்கி நிற்கும் ஆவடி சேக்கால் சுரங்கப்பாதை.

மழை நீரால் ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை அடிக்கடி நிரம்பி விடுவதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஆவடி சேக்காடு பகுதியில் உள்ள சுரங்க பாதை மழை நீரால் மூழ்கியதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இந்த சுரங்க பாதையை கோபாலபுரம், சேக்காடு, தென்றல் நகர், வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் உள்ள மக்கள் அவர்கள் உள்ள இருப்பிடங்களுக்கு செல்ல இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி வந்தனர்.மழைக்காலம் என்றாலே இந்த சுரங்கப்பாதை நீரால் மூழ்கி காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.


இந்த சுரங்கப் பாதையில் தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்றுவதற்காக நீர் இறைக்கும் ராட்சத மின்மோட்டார்கள் ஆவடி மாநகராட்சியால் அருகாமையில் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் குறைந்த அளவே வெளியேறுவதால் கூடுதல் ராட்சத மின்மோட்டார்கள் அமைத்திடவும், சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையில் தேங்க கூடிய மழை நீர் முழுவதும் இந்த சேக்காடு சுரங்கப்பாதையில் செல்வதால் விரைவாக சுரங்கப்பாதை நீரால் நிரம்பி விடுகின்றது.

சிடிஎச் சாலையில் செல்லக்கூடிய மழை நீரை மாற்று பாதையில் கொண்டு செல்லவும் புதிதாக கூடுதல் ராட்சத நீர் இறைக்கும் மின்மோட்டார்கள் அமைத்திடவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!