ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடந்த ரயில் மறியல் போராட்டம்.
காங்கிரஸ் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆவடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் ரயில் மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் ஏஜி. சிதம்பரம், லைன் டி. ரமேஷ், காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளர் அஷ்ரவர்தன் உட்பட 300.க்கும் மேற்பட்டோர் இந்த மறியலில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சென்னை அரக்கோணம் ஆகிய இரண்டு மார்க்கத்திலும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருபுறங்களிலும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதில் மாநில நிர்வாகிகள் புழல் மாநில விவசாயி பிரிவு தலைவர் பவுன் குமார், குபேந்திரன், மாநில செயலாளர்கள் சம்பத், கணபதி, குணாநிதி, யாகாட்டூர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் பாபு சங்கீதா, வீராபுரம் தாஸ், ஸ்ரீராமுலு நாயுடு, ஆசிர்வாதம், முரளி, எல்லாபுரம் தெற்கு வட்டார தலைவர் வெங்கல் சிவசங்கரன், வடக்கு வட்டாரத் தலைவர் மூர்த்தி, பொன்னுரங்கம், மகாலிங்கம், ஆர்.ரமேஷ், சேட்டு, சசிகுமார், ஆரணி பேரூர் மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், பொன்னேரி எழிலரசி, மாத்தூர் ரங்கநாயகி, கௌரி கோபால், ஆவடி தனா, அபிஷேக், திருவள்ளூர் நகர தலைவர் ஜான், அஸ்வின், பிரபாகரன், கும்மிடிப்பூண்டி பெரியசாமி, ஜோதி சுதாகர், சந்திரசேகர், பூந்தமல்லி சேகர், ராமன், ரங்கநாதன் ஆகியோர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu