ஆவடியில் கள்ளக்காதலை கண்டித்த மனைவி, கணவன் செய்த விபரீதம் பரபரப்பு

ஆவடியில் கள்ளக்காதலை கண்டித்த மனைவி, கணவன் செய்த விபரீதம் பரபரப்பு
X

பைல் படம்

ஆவடியில் கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தனக்குதானே கத்திரியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அந்த பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தனக்குதானே கத்திரியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் சகரியா (47). இவர் அதே பகுதி கண்ணியமன் நகரில் உள்ள கல்லறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. டைலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சகாரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மலர் என்ற பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் இது ராஜலட்சுமியின் காதுக்கு எட்டவே அவர் சகரியாவை கண்டித்ததுடன் கள்ள காதலை உடனடியாக கைவிடுமாறும் கணவரை வற்புறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து என்னிடம் தகராறு செய்தால் தற்கொலை செத்து விடுவேன் எனவும் கூறி சகரியா மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கணவன், மனைவிக்கும் இடையே இது தொடர்பாக மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சகரியா தனது கள்ளக்காதலியின் வீட்டுக்கே சென்று, அவருடன் இணைந்து வாழப்போவதாக கூறியுள்ளார். இதனை மனைவி ராஜலட்சுமி கடுமையாக எதிர்த்துள்ளார்.

அப்போது திடீரென கத்திரிக்கோலை எடுத்த சகரியா தன்னுடைய வயிற்றுப் பகுதி மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக தனக்கு தானே குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவரை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி சகரியாவை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சகரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக் காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!