மக்கள் நலத் திட்டங்களை முன்னதாகவே நடைமுறைப்படுத்தியவர் முதல்வர்: தொமுச பாராட்டு
தொ.மு.ச பேரவை அகில இந்திய பொது செயலாளர் மு. சண்முகம்
ஆவடி அருகே சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாடி யாதவாள் தெருவில் நடைபெற்றது..
அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் டிஎஸ்பி ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் தொ.மு.ச பேரவை அகில இந்திய பொது செயலாளர் மு. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாட்டில் கோயிலை கட்டலாம் ஆனால் நுழையக்கூடாது என்பதை கலைக்க வேண்டும் என்பதற்காக எல்லா சாதியினருக்கு அர்ச்சகராகலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, பெரியாரின் கனவை 70 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு முதல்வர்தான்.
திராவிட முன்னேற்ற கழகத்தில் மக்களுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை மாற்றி நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.மனிதன் இழுக்கும் கை ரிக்ஷா பயன்பாட்டின் காலத்தில் கைரிக்ஷா பயன்பாட்டை தடுத்து ஆட்டோ ரிக்ஷாவை துவக்கி வைத்தது திராவிட முன்னேற்ற கழகம் எனவும், ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை இருந்த காலம் மாறி ஆட்டோ ஓட்டும் நிலை மாறியுள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு உரிமம் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்..
ஆட்சி பொறுப்பேற்று இலவச பேருந்து பயண திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்ட பெருமை தமிழ்நாடு முதல்வரையே சாரும். கண்ணகி நகர் பகுதி பெண்கள் பாரி முனை கடைகளில் வேலை செய்து விட்டு வீட்டிற்கு இலவச பேருந்து பயணத்தை மேற்கொள்வது தமிழ்நாடு முதல்வரின் திட்டதால் தான். இந்த திட்டம் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு தான் பயன்படுகிறது. கல்லூரி படிப்பின் போது தேவைப்படும் பணத்தேவைகளை தகப்பனோ சகோதரனோ யோசிக்காத திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் செய்து காட்டியது தான் சாதனை. காலை உணவு இல்லாமல் பள்ளிகளுக்கு வர முடியாத நிலையில் இருந்த தொடக்க பள்ளி மாணவர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் விரைவாக பள்ளி வருவதற்கு, காலை உணவு திட்டத்தை அமல்ப்படுத்தியவர் தமிழ்நாடு முதல்வர். மற்ற மாநிலங்களில் சிந்தித்து கொண்டிருக்கும் திட்டங்களை முன்னதாகவே நடைமுறைப் படுத்தி யவர் தமிழ்நாடு முதல்வர் என புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பிகே மூர்த்தி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu