செஸ் ஒலிம்பியட் போட்டி: ஆவடியில் ராட்சத பலூனை பறக்க விட்ட அமைச்சர் நாசர்
ராட்சத பலூனை பறக்க விட்ட அமைச்சர் நாசர்.
சென்னை மகாபலிபுரத்தில் முதல் முறையாக வருகின்ற 28 தேதி அன்று 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி நடைபெற்றது. இதற்காக தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் துவக்கி வைத்தார். அப்பேரணியில் கலந்துகொண்டு அவர் தெரிவித்ததாவது:
44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுவது முன்னிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், இந்த ஒலிம்பிக் டார்ச்சை இன்றைய தினம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளுர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தப்பட்டது.
இந்த 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக முதல்வர் ஏறக்குறைய ரூ.100 கோடியை அந்த ஒலிம்பியாட் போட்டிக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டியில் ஏறக்குறைய 188 நாடுகள் பங்கு பெறவுள்ளனர். இந்த சதுரங்க விளையாட்டு மிகவும் பழமையானதாகும். அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே குறிப்பாக ஏறக்குறைய 6000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சதுரங்க போட்டி நம் இந்தியாவில் இருந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்களம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் சதுரங்க வல்லநாதர் கோயில் 1500 ஆண்டுகளுக்கு பழமையானது. அந்த கோயில் மூலவர் சதுரங்க வல்லநாதர்பேரில் தான் இந்த செஸ் இன்றைய தினம் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தயாரிக்கப்பட்ட ராட்சத பலூனை ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைச்சர் நாசர் பறக்க விட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இந்த செஸ் ஒலிம்பியாட் தீபம் கோயம்புத்தூரிலிருந்து திருவள்ளுர் மாவட்டத்திற்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அத்தீபத்தை விளையாட்டு வீரர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற அடையாள சிற்பத்தை செஸ் நினைவுச் சின்னத்துடன் அமைக்கப்பட்ட செல்ஃபி அரங்கத்தை திறந்து வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வுகளில், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகராட்சி மேயர் உதயகுமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரி திட்ட இயக்குனர் ஜெயக்குமார், விளையாட்டு நல அலுவலர் அருணா, மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு, ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் ஆசிம்ராஜா, மண்டல குழு தலைவர்கள் ராஜேந்திரன், அமுதா பேபிசேகர், அம்மு விஜயன், ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், நகரமன்றத் தலைவர்கள் மூர்த்தி, உஷாராணி ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu