வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 2.50 லட்சம் திருட்டு: போலீஸார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் ஜூலியா யுவராணி. இவர் மகளிர் சுய உதவிக் குழு தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று மகளிர் குழு பணி தொடர்பாக, ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது , வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 10 சவரன், ₹.2.50லட்சம் ரொக்கம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இந்தத் சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்தனர். இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வீடு, கதவு பீரோவில் பதிவாகி இருக்கும் தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu