தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ஆவடி அருகே சோகம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ஆவடி அருகே சோகம்
X

ருத்ரா

சென்னை ஆவடி அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆவடி அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் வசிப்பவர் அருள், வயது 30, லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருகிறறார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளன. நேற்று முன்தினம், வீட்டில் விளையாடி கொண்டிருந்த இளைய மகள் ருத்ராவை திடீரென காணவில்லை.

இதையடுத்து, பெற்றோர் தேடியுள்ளனர். அப்பொழுது குழந்தை வீட்டிலிருந்த தண்ணிர் தொட்டியில் விழுந்துள்ளதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்