ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா

ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா
X

அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள்

ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சேக்காடு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அருள்பதி திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா சிறப்பான முறையில் கோவில் அறங்காவலர் பற்குணம் தலைமையில் நடைபெற்றது.

இந்த திருஏடு வாசிப்பு திருவிழாவில் கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இருந்து 108 சந்தன குடம் எடுத்துவந்து அய்யா அருள்பதி திருக்கோவில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் அருளாளர் மாரிமுத்து தலைமையில் கருட சேவை ஊஞ்சல் தாலாட்டு மற்றும் ஆணி வைத்த பாதணி அணிந்து ஆணி வைத்த இருக்கையில் அமர்ந்து, ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்பு கருட சேவையில் வீதி உலா சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோட்டில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய கிடங்குக்கு மாற்றம்..!