அயப்பாக்கம்: வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை, ரூ.10ஆயிரம் பணம் கொள்ளை..!

அயப்பாக்கம்: வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை, ரூ.10ஆயிரம் பணம் கொள்ளை..!
X
அயப்பாக்கம் வியாபாரி வீட்டை திறந்து 15 சவரன் நகைகள், ரூ.10ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

சென்னையை அடுத்த அயப்பாக்கம் கணேஷ் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவுன்மணி நேற்று காலை மகேந்திரன் தனது மனைவி பவுன்மணியுடன் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று முன்னதாக தம்பதியினர் சாவியை வீட்டிற்கு வெளியே இருந்த வாஷிங் மெஷின் உள்ளே மறைத்து வைத்து சென்றுள்ளனர்.

பின்னர் தம்பதியினர் வியாபாரம் முடிந்து இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் வாஷிங் மெஷினில் வைத்து இருந்த வீட்டு சாவியை எடுத்து கதவைத் திறந்து கொள்ளைத் செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மகேந்திரன் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா மூலம் பட்டப்பகலில் வியாபாரி வீட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!