அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!
X

முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள்.

அயப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை ஊராட்சிமன்ற தலைவர் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் மதுரவாயல் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர், சுகாதாரத் துறையினர் என 500க்கும் மேற்பட்ட முன் களப் பணியாளர்களுக்கு அரிசி , காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் வழங்கப்பட்ட இந்த நிவாரண பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் துரை வீரமணி வழங்கினார். அதேபோல் அயப்பாக்கம் ஊராட்சியில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட 1500 நோயாளிகளுக்கு கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!