அயப்பாக்கம் பகுதியில் ஐபோனை போலீஸ் ஏட்டு பறித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
அயப்பாக்கம் பகுதியில் ஐபோனை போலீஸ் ஏட்டு பறித்ததால் காலி மதுபாட்டிலை உடைத்து ஆட்டோ டிரைவர் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஐயப்பன் நகர் ஓம் சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் இருவரும் ஆட்டோ டிரைவர்கள். நேற்று மதியம் பாக்கியராஜ் பிரதீப்பை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் வீட்டை விட்டு வெளியே சென்று, பின்னர் அவர்கள் அயப்பாக்கம் கிரீன் கார்டன் அருகில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். பின்னர் பாக்கியராஜ் அங்குள்ள காலி மைதானத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளனர்.
அப்போது ஆட்டோவில் பிரதீப் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த நேரம் அப்பகுதிக்கு திருமுல்லைவாயில் ரோந்து போலீசார் ஏட்டு சந்தோஷ் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவர் சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் இருந்த பிரதீப்பை அளிதள்ளனர். அப்போது மைதானத்தில் இயற்கை உபாதையை கழித்து விட்டு பாக்கியராஜ் அங்கு வந்தனர். இதனையடுத்து ஏட்டு சந்தோஷ் பாக்யராஜை விசாரித்தனர். பின்னர் அவர் பாக்யராஜ் இடமிருந்து விலை உயர்ந்த ஐபோனையும், பிரதீப்பிடம் இருந்து செல்போனையும் வாங்கியுள்ளனர்.
பின்னர் அவர் பாக்யராஜ், பிரதீப் இருவரிடம் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு வந்து செல்போன் குறித்த விவரங்களை அளித்து விட்டு வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளனர். அதற்கு பாக்யராஜ் ஐபோனை கொடுக்கும்படி கேட்டுக் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவருக்கும் சந்தோஷூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த சந்தோஷ் பாக்கியராஜ் கண்ணத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாக்கியராஜ் ஐபோன் தராவிட்டால் அருகில் கிடந்த காலி மது பாட்டிலை உடைத்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளனர்.
அப்போது சந்தோஷ் அவரிடம் முடிந்தால் தற்கொலை செய்துகொள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த பாக்யராஜ் காலி மது பாட்டிலை உடைத்து கண்ணாடித் துண்டை எடுத்து கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்த சந்தோஷ் ஐபோன், செல்போனையும் அவர்களிடம் கொடுத்து உள்ளனர். பின்னர் ஏட்டு சந்தோஷ் அங்கிருந்து பயத்தில் கிளம்பியுள்ளனர். இதனையடுத்து பிரதீப் பாக்கியராஜை மீட்டு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அயப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாக்யராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் போலீஸ் ஏட்டு சந்தோஷிடம் அம்பத்தூர் மாவட்ட துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu