அயப்பாக்கம்: முன்விரோதத்தில் கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது
![அயப்பாக்கம்: முன்விரோதத்தில் கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது அயப்பாக்கம்: முன்விரோதத்தில் கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது](https://www.nativenews.in/h-upload/2022/01/26/1462792-img-20220126-wa0014.webp)
கைதானவர்கள்.
ஆவடி அடுத்து அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசிக்கும் தினேஷ் (33) என்பவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான பாலினோ காரை கடந்த 21-ம் தேதி வீட்டு வாசலில் காரை நிறுத்தியிருந்த போது, அன்று மாலை 5 மணியளவில் இரண்டு நபர்கள் வந்து கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கொடுத்த கூறப்படுகிறது.
இவர் அளித்த புகாரின் திருமுல்லைவாயில் ஆய்வாளர் விஜயராகவன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து எதிரிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வந்தாஅர். நேற்று மதியம் 13.00 மணிக்கு, எதிரிகள் சந்தோஷ் (21) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அயப்பாக்கம் மற்றும் கிருஷ்ணகுமார் (21) தேவி நகர் அயப்பாக்கம் ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu