தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து அமித் ஷா பேசி வருகிறார்: சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சமமான வாழ்க்கை முறை இல்லாதபோது சமமான கல்வி,ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் என மருத்துவ பொது கலந்தாய்வுக்கு சீமான் கண்டனம் தெரிவித்தார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான எந்தவித திட்டமும் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை, ஏற்கெனவே நீட் தேர்வினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே ரேஷன், ஒரே கலந்தாய்வு, ஒரே கல்வி கொள்கை என்பதையெல்லாம் ஏற்க முடியாது. சமமான வாழ்க்கை முறை இல்லாதபோது சமமான கல்வி, ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம். நமக்கென கலாசாரம் பண்பாடு வரலாறு உள்ளது. அதை படிக்க முடியாத கல்வி நமக்கு எதற்கு.
தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து அமித் ஷா பேசி வருகிறார்.கோவில்களை பூட்டிவிட்டு போவது தான் சமூக நீதியா?? உள்ளே சென்று வழிபடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறுவதற்கு ஒரு தலைவன் இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது, கேரளாவில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு கூடியிருக்கிறது என கூறினார்.
இறுதியாக தமிழரான நடிகர் விஜய் நாடாளுமன்ற தேர்தலில் களம் காண வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழ் இனத்தில் பிறந்தால் மட்டும் தமிழராக முடியாது, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் இறுதிவரை போராடுபவரே தமிழர் பட்டமளிப்பு விழாவெல்லாம் ஒரு விழாவா?? ஆளுநருக்கு அதை விட முக்கியமான வேலைகள் இருக்கும், இதற்கெல்லாம் அவரை அழைக்க கூடாது.திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு..ஆளுநருக்கு எதிராக பனகல்மாளிகை அருகே கத்திவிட்டு சென்று விடுவார்கள். அது அவர் காதில் கூட விழாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து இரிட்டேட் செய்வதும் டென்ஷன் செய்வதும் தான் பாஜகவின் வேலை என்றார் சீமான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu