அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர் கைது

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர் கைது
X
அம்பத்தூர் அருகே துணிக்கடை குடோனின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பதிப்பிலான துணிகளை திருடிய 3 பேரை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அய்யப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷய். இவர் அய்யப்பாக்கம்- அம்பத்தூர் செல்லும் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு என்பதால் கடை மூடப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிக்காக அங்கு வேலை செய்து வரும் ஜஹாங்கீர் என்பவர் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் பின்புறம் உள்ள குடோனின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்து வந்த கடை உரிமையாளர், குடோனில் சென்று பார்த்த போது, சுமார் 4 லட்சம் மதிப்பிலான துணிகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் அக்‌ஷய் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் இன்று அதிகாலையில் அயப்பாக்கம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை நிறுத்தி விசாரித்தனர்.

போலீசாரை பார்த்ததும் அதில் ஒரு நபர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மற்றொரு நபரை மடக்கிப்பிடித்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், துணிக்கடையில் திருடியது சதீஸ் (20) என்பதும், தப்பி ஓடிய நபர் முகேஷ் என்பதும், தெரியவந்தது.

இவர்களை கைது செய்த போலீசார், இவர்களுடன் திருட்டில் ஈடுபட்ட இரணியன் என்ற நபரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த துணிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியோடும், புகாரின் அடிப்படையிலும், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!