Amavasai Special Pooja ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி அமாவாசை சிறப்பு வழிபாடு.

Amavasai Special Pooja   ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி   அமாவாசை சிறப்பு வழிபாடு.
X

அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆஞ்சநேயர்.

Amavasai Special Pooja திருநின்றவூர் அருகே பாக்கம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Amavasai Special Pooja

மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடப்பது வழக்கமான ஒன்றாகும். அன்றைய தினம் பக்தர்கள்ஏராளமானோர் கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இதனால் அன்றைய தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடப்பதோடு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அந்த வகையில் ,

Amavasai Special Pooja


திருநின்றவூர் அருகே பாக்கம் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் உற்சாகத்துடன் பங்கேற்ற பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் சுமார் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கமாகும் இதன் ஒருபகுதியாக ஐப்பசி மாத அமாவாசையையொட்டி இன்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முதல் நிகழ்வாக பக்தகோடிகள் ஆஞ்சநேயரையும், ராமபிரானையும் போற்றி பஜனை பாடினர்.இதனை தொடர்ந்து மலரலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு திவ்யமாக காட்சியளிக்க அவருக்கு தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து வருகை தந்து கலந்து கொண்ட திரளான பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு சென்றனர்.

திருநின்றவூர் அருகே பாக்கம் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி அமாவாசையை முனனிட்டு சிறப்பு வழிபாடு. கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர

Tags

Next Story