அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஆவடி மாநகராட்சி அதிமுக உறுப்பினர்

அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஆவடி மாநகராட்சி  அதிமுக உறுப்பினர்
X

ஆவடி மாமன்ற உறுப்பினர் அதிமுக  உறுப்பினர் அதிமுகவிலிருந்து அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஆவடி மாநகராட்சி அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 4 உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது

ஆவடியில் மீண்டும் ஒரு மாமன்ற உறுப்பினர் மாமன்ற உறுப்பினர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கடந்த 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் மல 38 வார்டுகள் திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுகவில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற சான்றிதழ் வாங்கிய சில நிமிடத்தில் 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் மருத்துவர் ராஜேஷ் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆவடி அதிமுகவில் மாணவரணி செயலாளராக உள்ள ஆதிகேசவன், மனைவி மீனாட்சி 16வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு 1342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அதிமுக வார்டு உறுப்பினர் மீனாட்சி ஆதிகேசவன் நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், இன்று ஆவடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் முன்னிலையில் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து 50க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தனர். தற்பொழுது ஆவடி மாநகராட்சி அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 4 உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளது, ஆவடி நகர அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself