ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆதரித்து நடிகை மனிஷா பிரசாரம்

சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் இரண்டாவது முறை அதிமுக சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆதரித்து மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை பிரிவு துணைச் செயலாளர் கிஷோர்குமார் ஏற்பாட்டில் களவாணி திரைப்பட நடிகை மனிஷா பிரியதர்ஷினி அப்பகுதியில் உள்ள தெருக்களில் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வில் திருநின்றவூர் பேரூராட்சி கழகச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி துரைராஜ், அவைத்தலைவர் தன்ராஜ், வட்ட செயலாளர் கோட்டீஸ்வரன் போன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டு அப்பகுதிகளில் உள்ள சிறிய தெருக்கள் முதல் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்,
அதிமுக அரசின் சாதனை விளக்கப் பாடல்களை பாடி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தனர். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் கூறிய அவர் இப்பகுதியில் உள்ள ஈசா ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்திக் கொடுத்தது முதல் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தது வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி,
100 சதவீத அளவுக்கு பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ததில் முன்னோடியாகத் திகழ்ந்து இருக்கிறேன். ஆகையால் மீண்டும் இந்த பகுதியில் உங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய பொன்னான வாக்குகளை எனக்கு தந்து மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற செய்வீர்களேயானால், உங்கள் பகுதிகளில் உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu