லெட்டர்பேட் மூலம் கட்சி நடத்தும் நடிகர்: விஜய் பற்றி தேமுதிக விமர்சனம்
விழா மேடையில் பேசிய எல்.கே சுதீஷ்.
கடந்த 6 மாதமாக உதயநிதிக்கு துணை முதல்வர், துணை முதல்வர் வழங்க வேண்டும் என கூறி திமுக தலைமையே பரப்பியது. இப்பொழுது வழங்கியுள்ளது. உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ்.கூறினார்.
தேமுதிக மாநில துணை செயலாளர் எல். கே.சுதீஷ் ஆவடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி.அளித்தார். அப்போது அவர் கூ றியதாவது:-
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா,கட்சியின் 20ம் ஆண்டு விழா,பத்மபூஷன் விருது வழங்கியதற்கு பாராட்டு விழா என தேமுதிக சார்பில் ஆவடி மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் முப்பெரும் விழாவாக ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே மாபெரும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில துணை செயலாளர் எல். கே.சுதீஷ் அவர்கள் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து மேடையில் பேசிய எல். கே.சுதீஷ். கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த லப்பர் பந்து படத்தில் ஹீரோ தினேஷ் அறிமுக காட்சியில் விஜயகாந்த் அவர்களின் பாடல் இடம்பெற்றுள்ளது, அந்த பாடல் ஒளிபரப்பப்படும் போது தியேட்டர் முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த திரைப்பட இயக்குனருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார். கேப்டனுக்கு tribute செய்துள்ளார்.IPL போட்டியில் சென்னை வீரர் தோனி வரும்போது இந்த பாடல்தான் நிச்சயமாக போடுவார்கள் என கூறினார்.
ரஜினி, கமலுக்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் கிடைதனர். ஆனால் கேப்டன் திரைப்பட துறைக்கு வரும்போது எந்த பெரிய தயாரிப்பாளர்களும் இல்லை,எனினும் 100 படம் நடித்த ஒரு நடிகர் கேப்டன் தான்.திரைபடத்தில் இளைஞர்கள், மகளிருக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்தார் இதனால் பெண்கள் தங்கள் அண்ணன் தம்பி தந்தையாக நினைத்தனர்.
பாமக ஒரு கொடி கம்பதை வெட்டினார்கள் தேமுதிக அவர்களின் அனைத்து கொடி கம்பதையும் வெட்டி சாய்தனர், பாமக பாபா பட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினார்கள்,ஆனால் கஜேந்திரா படத்தை அவர்களால் தொடகூட முடியவில்லை.
நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து லெட்டர் பாட் மூலம் கட்சி நடத்துகிறார்கள். 2026 ல் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும்.
விஜயகாந்த் மன்றம் கிராமத்தில் நோட்டு புத்தகம் கொடுப்பது போல இன்று திமுகவால் கஞ்சா கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி வெளியில் மாணவர்களுக்கு இனிப்பு கிடைக்கும் ஆனால் இப்பொழுது கஞ்சா கிடைக்கிறது.அன்று தேமுதிக அதிமுக இடையே பிரச்சினை இல்லை என்றால் இன்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்து இருப்பார்,அப்பொழுது வேண்டாம் என கூறினார். இன்று அதிமுக பாடம் கற்றுக்கொண்டு உள்ளனர் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu