/* */

தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சா.மு.நாசர்

ஒட்டுமொத்தமாக நாட்டையே அமைச்சர்களும் அவர்கள் சகாக்களும் சுரண்டி விட்டு சென்று விட்டனர் -அமைச்சர் சா.மு.நாசர்

HIGHLIGHTS

தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சா.மு.நாசர்
X

தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கம்பி எண்ணப்போவது நிச்சயம். அமைச்சர் சா.மு.நாசர்

திருமுல்லைவாயிலில் செயல்பட்டு வரும் விதையின் உதயம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டு நரிக்குறவ மாணவி ஒருவருக்கு டேப் வழங்கியதுடன், கலப்புதிருமணம் செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. எஸ்.பி. வேலுமணி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, அதே கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கவர்னரிடம் சென்று மனு கொடுத்திருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறவர்கள் இவர்களின் செயலை என்ன சொல்லுவார்கள்.

இபிஎஸ்-க்கு டயர் நக்கி என்று பெயர் வைத்ததும், கவுன்சிலருக்கு கூட லாயக்கில்லாத ஒருவர் தான் முதலமைச்சராக இருக்கிறார் என்று எடப்பாடியை சொன்னவரும் அன்புமணி ராமதாஸ் தான். தற்போதைய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் படி ஒவ்வொருவர் தலையிலும் 2,65,000 ரூபாய் கடனாக இருக்கிறது. இந்த பணம் எங்கு சென்றது. ஒட்டுமொத்தமாக நாட்டையே அமைச்சர்களும் அவர்கள் சகாக்களும் சுரண்டி விட்டு சென்று விட்டனர்.

உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அரசின் உள் நோக்கம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. ரோட்டோர மந்திரி ஜெயகுமாருக்கும் இதே நிலைதான். தவறு செய்தவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடுக்கை எடுக்கப்படும். அவர்கள் கம்பி எண்ணப்போவது நிச்சயம். ஊழல் செய்தவர்களில் முக்கியமானவர் ராஜேந்திர பாலாஜி. ஊழலின் ஊற்றுக் கண்ணே அவர்தான். அவர்மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும். ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். உப்பு சாப்பிட்டவர்கள் நிச்சயம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 12 Aug 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி