ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி காவல் ஆணையர் சங்கர்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி,ஆவடி காவல் ஆணையரகம்,நாசரேத் கல்லூரி இணைந்து "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், மயிலாட்டம்,பொய்க்கால் குதிரை,மாட்டு வண்டி,குதிரை வண்டி பயணம்,சிறுவர் சிறுமியர் விளையாட விளையாட்டு என பலவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.மேலும் மக்கள் இவைகளை கேட்டு கண்டு மகிழ வில்லு பாட்டு,பரத நாட்டியம் ஆகியவையும் அமைந்திருந்தன.
மேலும் கூடை பந்து,இறகு பந்து,வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளும் விளையாட இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.இது மட்டுமின்றி டிஜே அமைக்கப்பட்டு திரை இசை பாடல்களுக்கு பொதுமக்கள் இளைஞர்கள்,இளம்பெண்கள் என அனைவரும் தங்களை மறந்து உற்சாகமாக நடனமாடி மகழ்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி நாசர் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பறை இசை கருவியை இசைத்து தனது மகிழ்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் பறை இசை கருவியை இசைத்தபடியே உற்சாகத்தில் நடனமாடியது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்தியது.அதுமட்டுமின்றி இளைஞர்களுடன் இணைந்து இறகு பந்து விளையாடியும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் பங்கேற்ற ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாசர் பங்கேற்று சிலம்பம் சுற்றியும்,குதிரை வண்டி,மாடு வண்டியில் பயணித்தும் பொதுமக்களுடன் நிகழ்வில் பங்கேற்றார்.இந்த நிகழ்வுக்கு போக்குவரத்து தடை செய்யபட்டு,நூற்று கணக்கான போலீசார் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு இறுக்கமான சூழலில் இருந்த தங்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த மன மகழ்சியை அளித்ததாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu