/* */

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய இளைஞர்

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் இளைஞர் ஒருவர் மல்லுக்கட்டிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.

HIGHLIGHTS

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
X

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் இளைஞர் ரகளையில் ஈடுபட்டார்.

  • ஆவடியில் கஞ்சா போதையில் பொதுமக்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை தடுக்க முயன்ற காவலர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார் போதை வாலிபர். பதிலுக்கு கட்டையை எடுத்து அடித்த காட்சிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் அப்பகுதியில் நடந்து சென்ற பொது மக்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் மீது கஞ்சா போதை வாலிபர் கல்லை எடுத்து வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காவலர் சரவணன் அங்கிருந்த கட்டையை எடுத்து கஞ்சா போதை வாலிபரை அடித்து காவல் நிலையம் அழைத்து சென்றார்.


பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் ரகளை செய்தவர் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது19) என்பதும், கரையான் சாவடியில் உள்ள பால் தயாரிக்கும் நிறுவனத்தில் பால் பேக்கிங் செய்யும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் அந்த பகுதியில் அடிக்கடி கஞ்சா போதையில் சில்மிஷத்தில் ஈடுபடுவது வழக்கம் எனவும் தெரியவந்தது. கஞ்சா போதை வாலிபர் லோகேஷ் மற்றும் காவலர் சரவணன் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையராகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கஞ்சா போதையில் வாலிபர் தகராறு செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற காவலர் சரவணன் மீது கஞ்சா போதை வாலிபர் லோகேஷ் கற்களை வீசி தாக்கியதாகவும், கஞ்சா போதையில் இருந்த லோகேஷை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்பட்டதாகவும், அவர் மீது சிறிய வழக்கு பதிவு செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Updated On: 6 May 2024 2:58 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...