3வது மாடியில் சித்தாள் வேலை செய்த பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

3வது மாடியில் சித்தாள் வேலை செய்த பெண் தவறி விழுந்து உயிரிழப்பு
X

உயிரிழந்த கட்டிட தொழிலாளி வளர்மதி.

ஆவடி அருகே சித்தாள் வேலை செய்த பெண் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி பட்டாபிராம் ஐடி பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.

பட்டாபிராம் ஐடி பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி ( வயது 50) என்பவர் வீடு கட்டும் தொழிலில் சித்தாள் வேலை செய்து வந்தார்.

இன்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார்.அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் அமைக்கப்படாத இருந்த லிஃப்ட் காக போடப்பட்ட கதவு திறந்து கொண்டதால் 3 வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அப்பெண் மயக்கமடைந்த நிலையில் 3 மணி நேரம் கழித்து கம்பெனி வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆவடி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே வரும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். உடலை கைப்பற்றிய பட்டாபிராம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil